வந்தே பாரத் ரயிலில் எந்த சிறப்பும் இலை: மம்தா பானர்ஜி விமர்சனம்!
சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே ரயில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த ரயிலில் எந்த சிறப்பும் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் வந்தே ரயில் தொடங்கப்பட்ட நிலையில் அந்த ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் வந்தே ரயில் மீது கற்கள் வீசப்பட்டன என்று மாநிலத்தை அவதூறு செய்யும் வகையில் ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிட்டுள்ளன என்றும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் வந்தே பாரத் ரயிலில் எந்த சிறப்பும் இல்லை என்றும் இது ஒரு புதிய எஞ்சின் பொருத்தப்பட்ட புதுப்பிக்கப்பட்ட பழைய ரயில் தான் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்தே ரயில் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில் மம்தா பானர்ஜியின் இந்த விமர்சனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva