புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (19:05 IST)

பிரதமர் அவர்களே ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.. முதலமைச்சர் உருக்கமான வேண்டுகோள்

modi
பிரதமர் மோடி இன்று தனது தாயாரை இழந்த நிலையிலும் தாயாரின் இறுதி சடங்கு முடிந்தவுடன் உடனடியாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 
 
இந்த நிலையில் பிரதமர் மோடி அவர்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றும் உங்களுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது பிரதமர் மறைவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை உங்களின் தாயார் எங்களுக்கும் தாயார்தான் இந்த நேரத்தில் எனது தாயாரை நான் நினைத்துப் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 
 
தொடர்ந்து பணியாற்ற கடவுள் உங்களுக்கு நல்ல பலத்தை கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன் என்றும் தயவு செய்து கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva