தாயின் உடலை சுமந்து சென்ற பிரதமர் மோடி! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமான நிலையில் அவருக்கு பிரதமர் மோடி இறுதி மரியாதைகள் செய்தார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஹீராபென் மோடிக்கு வயது 100. தனது தாய் இறப்பையொட்டி குஜராத் சென்ற பிரதமர் மோடி தாய்க்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்தார். தகனத்திற்காக தாயின் உடலை தானே சுமந்து சென்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பலரும் மோடியின் தாயார் மறைவுக்கு வருத்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Edit By Prasanth.K