வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 30 மார்ச் 2023 (14:01 IST)

பாஜகவை நாட்டின் எதிரி என நான் கூற மாட்டேன்: மம்தா பானர்ஜி

பாஜகவை  நாட்டின் எதிரி என்று கூற மாட்டேன் ஆனால் அதே நேரத்தில் பாஜக அகற்றப்பட வேண்டிய ஒரு ஆட்சி என மேற்குவங்க முதல்வர் மந்த பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர  வேண்டும் என்றும் எதிர் கட்சியின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதை விட நாட்டை காப்பதற்கான போராட்டம் என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
பாஜக நாட்டின் எதிரி என்று நான் கூறமாட்டேன் ஆனால் அதே நேரத்தில் மகாபாரதத்தில் வரும் துச்சாதனன் போன்றது பாஜக, அந்த துச்சாதனனை அப்புறப்படுத்தி விட்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றால் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Siva