1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (17:15 IST)

என் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கிறார்கள் - மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீப காலமாகவே மம்தாபானர்ஜி மத்தியில் ஆளும் பாஜக அரசை குற்றம் சாட்டுக்கொண்டிருந்தார். மோதல் போக்கும் மிகத் தீவிரமாகவே இருந்தது. 
இந்நிலையில் தன் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், தனது மாநிலத்தில் பாஜக மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மாநில அரசை பலிவாங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்திய நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இத்துடன் தன் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும் மத்திய அரசு மீது அடுக்கடுக்காய் புகார் தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி மம்தா பானர்ஜி கூறியதாவது:
 
தொலைபேசு உரையாடல்கள் ஒட்டுக்கேட்பது ஜனநாயக நாட்டிற்கு எதிரானது.இதுகுறித்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ராஷ்டிரிய ஸ்வயம் சேவாக், பாஜகவிற்கு ஆதரவாக மதக் கலவரம் தூண்ட முயற்சிக்கிறது. இதற்கு வெற்றி கிடைக்காது இவ்வாறு கூறினார்.