வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:05 IST)

பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த மம்தா?

பிரதமருடனான ஆலோசனையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இந்தியாவின் ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மாநில அரசுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் மத்திய அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அந்த வகையில் பிரதமர் மோடி இன்று 12 மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் அதிகம் பரவி வரும் மாநிலங்களின் முதல்வர்களுடன் மட்டும் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படலாம் போன்ற அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்த ஆலோசனையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் மேற்குவங்க தலைமைச் செயலாளர் கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.