1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (11:04 IST)

சினிமாவில் மட்டுமில்லை, அரசியலிலும் படுக்கைக்கு அழைக்கின்றார்கள்: பாஜக எம்பி

படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து சமீபகாலமாக பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் முடியவில்லை
 
இந்த நிலையில் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் உள்ளது என்று பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான சத்ருஹன்சின்ஹா தெரிவித்துள்ளார்.
 
மேலும் படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து நடன இயக்குனர் சரோஜ்கான் கூறியது சரிதான் என்றும், அவர் நடந்த, நடக்கும் உண்மையை தெரிவித்துள்ளார் என்றும் அவரை குறைகூறுவதை நிறுத்திவிட்டு இந்த நிலையை ஏற்படுத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

மேலும் படுக்கைக்கு செல்வது என்பது ஒருவர் சுயமாக எடுக்கும் முடிவு. அவருக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக படுக்கைக்கு சம்மதிக்கின்றார். இதில் யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. எனவே இதில் குறை சொல்லவும் எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். சத்ருஹன் சின்ஹாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.