பக்தர்களை ஆபாசமாக திட்டிய திருப்பதி கோவில் தேவஸ்தான ஊழியர்.. அதிரடி நடவடிக்கை..!
திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள், பக்தர்களை ஆபாசமாக திட்டியதை தொடர்ந்து, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், சமீபத்தில் ஒரு பக்தர் பரிந்துரை கடிதத்துடன் தேவஸ்தான அலுவலகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது, அங்கு இருந்த இரண்டு ஊழியர்கள் பரிந்துரை கடிதம் கொண்டு வந்த பக்தரையும், அவருடைய குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் செய்ததை அடுத்து, விசாரணை நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில், ஆபாசமாக திட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், ஊழியர்கள் ஆஜராகவில்லை என தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, இரண்டு ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஒரு ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட பக்தர்களின் குடும்பத்தினர், இந்த தண்டனை போதுமானதாக இல்லை என்றும், மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Mahendran