வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மார்ச் 2023 (18:14 IST)

அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!

rahul
ராகுல் காந்தி எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
இதனை அடுத்து அவரது எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது அவர் எம்பி ஆக இல்லை என்பதால் அரசு பங்களாவிலிருந்து அவர் காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran