1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (10:10 IST)

ராகுல்காந்தி மீதான வழக்கை உற்று கவனித்து வருகிறோம்: வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கருத்து..!

white house
இந்திய நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீதான வழக்கை உற்று கவனித்து வருகிறோம் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்து தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு இந்தியா மட்டும் இன்றி சர்வதேச ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக வந்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்து தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறிய போது ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட நிகழ்வு குறித்தும் இது தொடர்பாக இந்திய நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு குறித்தும் நாங்கள் உற்று கவனித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை சுதந்திரத்திற்கு மரியாதை அளிப்பது ஜனநாயகத்திற்கு அடிப்படை என்றும் கருத்து சுதந்திரம் உள்பட ஜனநாயக மதிப்புகளை பாதுகாப்பது குறித்த உறுதிபாட்டை இந்திய அரசுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ராகுல் காந்தியின் பதவி நீக்கம் குறித்து அமெரிக்காவில் வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran