1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: திக்விஜய்சிங்-சசிதரூர் இடையே போட்டி!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் விலகியதை அடுத்து தற்போது திக்விஜய் சிங் மற்றும் சசிதரூர் ஆகிய இருவருக்கு மட்டுமே போட்டி என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய மூவருமே போட்டியிடவில்லை 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அசோக் கெலாட், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து திக்விஜய்சிங் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ற்கனவே இந்த தேர்தலில் போட்டியிட சசிதரூர் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எனவே திக்விஜய் சிங் மற்றும் சசிதரூர் ஆகிய இருவருக்கும் இடையே மட்டும் தான் போட்டி என்றும் இருவரும் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva