1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 4 மார்ச் 2023 (11:13 IST)

யூடியூபை பார்த்து கள்ளநோட்டு அச்சடித்தவர் கைது: அச்சு இயந்திரம் பறிமுதல்..!

arrest
மகாராஷ்டிரா மாநிலத்தில் யூடியூபை பார்த்து கள்ள நோட்டை அச்சடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அச்சடித்த இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்காவ் என்ற பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வருவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்த நிலையில் சந்தேகத்திற்கு இடமாக ராஜேந்திரன் யாதவ் என்பவரது வீட்டில் திடீரென சோதனை நடத்தினார். அப்போது அவர் ரூபாய் 1.6 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் மற்றும் அச்சடிக்கும் இயந்திரங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
 
இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது யூடியூபை பார்த்து கள்ள நோட்டு அச்சடிக்க கற்றுக் கொண்டதாகவும் கள்ள நோட்டை கொஞ்சம் கொஞ்சமாக புழக்கத்தில் விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
100 ரூபாய் 200 ரூபாய் 500 ரூபாய் என விதவிதமாக அவர் கள்ள நோட்டு அடித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran