புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (09:41 IST)

பதவி வரும் போகும்... ஆனா இது அவமானம்: உத்தவ் தாக்ரே தடாலடி!

மக்களின் பாசமே உண்மையான சொத்து என மகாராஷ்டிரா மக்களிடம் உத்தவ் தாக்ரே உறையாற்றினார். 

 
மகாராஷ்டிராவில் முன்னதாக நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா, பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியிலிருந்து விலகிய சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. அதுமுதல் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இருந்து வருகிறார். 
 
இதனிடையே சிவசேனாவில் கட்சி உட்பூசல் ஏற்பட்ட நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிரா அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 40 பேருடன்  அசாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார். இதனால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பேஸ்புக் வாயிலாக மகாராஷ்டிரா மக்களிடம் உத்தவ் தாக்ரே உறையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு சரத் பவார் மற்றும் சோனியா காந்தி தன்னை நம்பி முதல்வர் பதவியை ஏற்க வலியுறுத்தினர். ஆனால், தற்போது என்னை சேர்ந்தவர்களே என்னை வேண்டாம் என்று கூறுகின்றனர். 
 
முதல்வர் பதவி என்ன கட்சி தொண்டர்கள் கூறினால் சிவசேனா கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்ய தயார். எங்கள் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ எனக்கு எதிராக இருப்பதும், எனக்கு அவமானம். முதல்வர் பதவி வரும், போகும் ஆனால் மக்களின் பாசமே உண்மையான சொத்து. கடந்த 2 ஆண்டுகளில் மக்களிடம் அதிக பாசத்தைப் பெறும் பாக்கியம் எனக்கு கிடைத்தது என பேசினார்.