புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (13:21 IST)

6 மாதங்களில் 400 பேர் பாலியல் வன்கொடுமை! – மகாராஷ்டிராவில் சிறுமிக்கு நடந்த கொடூரம்!

மகாராஷ்டிராவில் 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 6 மாதத்திற்குள் 400 பேரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாய் இல்லாத இவருக்கு இவரது தந்தை கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் அங்கு சிறுமியின் கணவர் மற்றும் மாமியார் துன்புறுத்தியதால் அவர் தனது தந்தையை தேடி வந்துள்ளார். ஆனால் தந்தையும் கைவிடவே பீட் மாவட்டத்தில் உள்ள அம்பாஜோகை பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் சிறுமியை பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரளிக்க சிறுமி காவல் நிலையம் சென்றபோதும் அவரது புகாரை ஏற்றுக் கொள்ளாததுடன் காவலர் ஒருவரே சிறுமியை வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் போலீஸார் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர். தற்போது அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.