1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 நவம்பர் 2021 (08:21 IST)

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அதிரடி கைது

மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை அமலாக்கதுறை நேற்று அதிரடியாக கைது செய்துள்ளது.

 
அனில் தேஷ்முக் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சராக இருந்தபோது அங்குள்ள பார் உரிமையாளர்களிடமிருந்து 100 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்து வழக்கு பதியப்படிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த  அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. 
 
ஆனால், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சம்மனுக்கு நேரில் ஆஜராகவில்லை. அதோடு சம்மனை ரத்து செய்ய கோரி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில் வேறு வழியின்றி அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஆஜரானார். 
 
விசாரணைக்கு ஆஜரானதும் அனில் தேஷ்முக்கிடம் பல மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பணமோசடி வழக்கில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளார்.