செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 23 நவம்பர் 2024 (13:01 IST)

மகாராஷ்டிராவில் தனித்து மெஜாரிட்டி பெற்ற பாஜக.. ஷிண்டேவுக்கு முதல்வர்? பதவி இல்லையா?

மகாராஷ்டிராவில் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பாஜகவின் பட்னாவிசுக்கு முதல்வர் பதவி என தகவல்
வெளியாகியுள்ளது. ஆனால் பெரிய கட்சிக்கு தான் முதல்வர் பதவி என்ற ஒப்பந்தம் எங்கும் செய்யப்படவில்லை என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
 
மகாராஷ்டிராவின் வெற்றி நிலவரங்கள் வந்து கொண்டிருக்க அஜித் பவார் தான் முதல்வர் என அவரது மனைவி பேட்டி அளித்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து என் அப்பா தான் முதல்வர் என ஷிண்டேவின் மகன் பேட்டி அளித்தார்.
 
இந்த நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வர் என பா.ஜ.கவின் தொண்டர்கள் ஆங்காங்கே வெற்றி முழக்கம் எழுப்பி வருகிறார்கள். தேவேந்திர பட்னாவிஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி 223 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பாஜக மட்டும் 126 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Mahendran