வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:45 IST)

மத்திய பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டைகள்! – ஆச்சர்யத்தில் மக்கள்!

உலகில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகள் மத்திய பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

உலகில் மனிதன் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகள் முன்னதாக பூமியில் வாழ்ந்தவை டைனோசர் என்னும் ராட்சத பிராணிகள். பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பல பகுதிகளில் ஆய்வுகளில் இவற்றின் எலும்பு கூடுகள், முட்டைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றை கொண்டு அந்த டைனோசர்களை சாக பட்சிணி, தாவர உண்ணி என வகைப்பிரித்து வரிசைப்படுத்தி வருகின்றனர். டைனோசர்கள் பற்றிய படங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமானதாகவும் உள்ளன.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 20க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டைகள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. டெதிஸ் கடல், நர்மதை ஆற்றுடன் இணையும் இடத்தில் உருவான கழிமுகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் முட்டைகள் கூடுகளுடன் அமைந்திருந்துள்ளன. கூடுகள் ஒவ்வொன்றும் அருகருகே அமையப்பெற்றுள்ளன.

இந்த முட்டைகளை எடுத்து ஆராய்ச்சிக்காக அனுப்பியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளின்போது தார் மாவட்டத்தில் பல கிராமங்களில் டைனோசர் முட்டைகள் மற்றும் படிவங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K