1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (18:41 IST)

திருமணத்தில் நடனமாடிய நபர் மாரடைப்பால் பலி

marriage
மத்திய பிரதேச மா நிலம் ரேவாவில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில்  நடனம் ஆடிக் கொண்டிருந்த  நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 32 வயது இளைஞர்  ஒருவர் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தார், அப்போது, திடீரென்று  நெஞ்சைப் பிடித்தபடி கீழே விழுந்தார்.

இதைப் பார்த்த திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தற்போது, இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மா நிலத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது,