நடிகையை விபச்சாரம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை?

நடிகையை விபச்சாரம் செய்ய வற்புறுத்தியதால் தற்கொலை?


Murugan| Last Updated: வெள்ளி, 4 நவம்பர் 2016 (18:43 IST)
தற்கொலை செய்து கொண்ட மும்பை நடிகை பிரதியுஷாவை அவரது காதலன் விபச்சாரம் செய்ய வற்புறுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

 

 
மும்பையில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பிரதியுஷா(24). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
அவரின் தற்கொலைக்கு, அவரது காதலன் ராகுல் சிங்கே காரணம் என, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி, மும்பை காவல் நிலையத்தில் புக்கார் அளித்தார்.  இதனால், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக, ராகுல் சிங் மும்பை நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். 
 
இந்நிலையில், பிரதியுஷா தற்கொலை விவகாரத்தில், அவரது காதலர் ராகுல் சிங்கிற்கு எதிராக, 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, மும்பை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் ராகுல் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். 
 
மேலும், பிரதியுஷா, ரகுல் சிங்கிடம் பேசிய கடைசி செல்போன் உரையாடல் எழுத்து வடிவமாக வெளி வந்துள்ளது. அதில் பல உண்மைகள் வெளிவந்துள்ளன.
 
அந்த உரையாடலில் “என்னை நான் விற்பதற்காக இங்கு வரவில்லை. நடிப்பதற்காகத்தான் வந்தேன். இன்று நீ என்னை எங்கு கொண்டு வைத்திருக்கிறாய் தெரியுமா?... நான் என்னை மோசமாக உணர்கிறேன். அது உனக்கு தெரியாது” என்று கூறுகிறார். மேலும், அவர்களின் உரையாடல்களில் விபச்சாரம் என்ற வார்த்தையையும் வருகிறது. 
 
எனவே, தன்னை ராகுல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதால், மனமுடைந்த பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டார் என்பது தெளிவாக தெரிகிறது என அவரின் பெற்றோர் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் குப்தாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
 
ராகுல் சிங்கிற்காக எதிராக ஏராளமான ஆதரங்களை போலீசார் திரட்டியுள்ளதால், இந்த வழக்கில் அவர் கண்டிப்பாக சிறைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :