புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (17:45 IST)

40 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை:தற்கொலைக்கு முயன்ற விவசாயி

மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வடோடா என்கிற குக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் கராத்தே என்பவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் 40 ஆண்டுகளாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை. ஆதலால் ஸ்ரீராம் கராத்தேவின் பேரன் ஈஸ்வர் கராத்தே என்பவர், புல்தானா மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற ஈஸ்வர் கராத்தே, மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக புல்தானா மின்சார அதிகாரி, 1980-ல் மின்சார இணைப்புக்கு விண்ணப்பம் கோரிய ஸ்ரீராம் கராத்தே இறந்துவிட்டார் எனவும், 2006 ஆம் ஆண்டு நிலுவை தொகையை செலுத்துமாறு ஈஸ்வர் கராத்தேவிற்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் நிலுவைத் தொகையை செலுத்த தவறிவிட்டார் எனவும் கூறினார்.

மேலும் அவர், ஈஸ்வர் கராத்தே நிலுவைத் தொகையை செலுத்தினால் மின் இணைப்பு தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஈஸ்வர் கராத்தே விஷம் குடித்து தற்கொலை செய்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.