செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 மார்ச் 2021 (15:04 IST)

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அது மட்டுமின்றி மீண்டும் தற்போது பிரபலங்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
கடந்த 19ஆம் தேதி ஓம் பிர்லாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது உடல் நலத்துடன் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கொரோனா என்ற தகவல் மக்களவையில் உறுப்பினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது