வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு? மும்முறம் காட்டும் தேர்தல் ஆணையம்!!

Sugapriya Prakash| Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (08:59 IST)
வாக்காளர் அடையாள அடையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்டரீதியான ஆதரவு கோரியுள்ளது தேர்தல் ஆணையம். 
 
கள்ள ஓட்டுகளை தடுக்கவும், ஒரே வாக்காளர் பல இடங்களில் இடம்பெறுவதை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு செய்தது தேர்தல் ஆணையம். ஆனால், இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 
 
எனினும் இதை கைவிடாமல் தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண் இணைப்பு குறித்து விளக்கியும், இந்த இணைப்பிற்காக அனுமதி கோரியும் கடிதம் ஒன்றை எழுதியது. 
 
இந்நிலையில் தற்போது இந்த கோரிக்கையை பரிசீலிட்து வருகிறது மத்திய அமைச்சகம். ஆனால், ஆதார் எண்களை பெறுவதற்கு அனுமதிக்கக்கூடிய சட்டம் தேவை என்பதை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :