திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மார்ச் 2019 (10:14 IST)

ஆதாரும் பானும் மேட்ச் ஆகலயா? சிம்பிள் சொல்யூசன் இருக்கே..!!!

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டுகள் முடக்கப்படும். மத்திய அரசு பான் கார்ட்டை ஆதார் எண்ணுடன் இணைக்க மார்ச் 31, 2019 வரை அவகாசம் அளித்துள்ளது.
 
அப்படி வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்ட் முடக்கப்படும். பான் கார்ட் முடக்கப்பட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,  
 
1. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. 
2. வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. 
3. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்ட் முக்கிய ஆவணம் எனவே, வங்கிகளிலும் சிக்கல் ஏற்படும். 
இந்த சிக்கலை எல்லாம் தவிர்க்க ஆதார் எண்ணுடன் பான் கார்ட்டை இணைக்க முற்பட்டு இரண்டிலும் உள்ள விவரங்கள் மேட்ச் ஆகாத போது என்ன செய்வது?
 
வெறி சிம்பிள், ஒன்று நேரடியாக பான் கார்ட்டில் மாற்றங்களை மேற்கொள்ளலாம். இதற்காக கொடுக்கப்படும் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்தால் போதும். 
 
அப்படி இல்லையென்றால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை பயன்படுத்தி மாற்றங்களை மேற்கொண்டு ஆதாரை பான் கார்டுடன் இணைப்பதை பூர்த்தி செய்யலாம்.