ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (11:23 IST)

எல்ஐசியில் பொது பங்குகள் வரும் 4 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதா?

அடுத்த மாதம் 4 ஆம் தேதி எல்ஐசியில் பொது பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
எல்ஐசி பங்குகளை வெளியிட சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது என்பதும் இதற்கு எல்ஐசி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இது குறித்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. 
 
இதனைத்தொடர்ந்து வெளிவந்த தகவலின் படி எல்ஐசி பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. எல்ஐசி பங்குகள் மூலம் 60,000 கோடியை மத்திய அரசு திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் பங்கு வெளியீட்டு தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்பட்டது. 
 
அதன்படி அடுத்த மாதம் 4 ஆம் தேதி எல்ஐசியில் பொது பங்குகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 22 கோடி பங்குகள் வெளியிட்டு 21,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.