1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (10:40 IST)

எல்.ஐ.சி. பங்குகளை வெளியிட செபி அனுமதி: ரூ.60,000 கோடி திரட்ட திட்டம்

எல்ஐசி பங்குகளை வெளியிட சமீபத்தில் மத்திய அரசு முடிவு செய்தது என்பதும் இதற்கு எல்ஐசி நிர்வாகமும் ஒப்புக் கொண்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
 
இது குறித்த சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் செபியிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளிவந்த தகவலின்படி எல்ஐசி பங்குகளை வெளியிட செபி அனுமதி அளித்துள்ளது. மேலும் பங்கு வெளியீட்டு தேதியை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
எல்ஐசி பங்குகள் மூலம் 60 ஆயிரம் கோடியை மத்திய அரசு திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.