செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (13:16 IST)

தனியாருக்கு விற்கப்படும் எல்.ஐ.சி! போராட்டத்தில் இறங்கிய ஊழியர்கள்!

மத்திய அரசின் பட்ஜெட்டில் எல்.ஐ.சி பங்குகளை விற்க போவதாக அறிவித்துள்ள நிலையில் எல்.ஐ.சி நிறுவன ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு சலுகைகளையும், நிதி நிலை அறிக்கைகளையும் வெளியிட்டார். அதில் அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டமும் அடக்கம். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அரசின் நிறுவனம் என்பதாலேயே பலர் எல்.ஐ.சியில் காப்பீடு எடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் எல்.ஐ.சி ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எல்.ஐ.சி பங்குகளை விற்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவை திரும்ப பெற வலியுறுத்தி எல்.ஐ.சி ஊழியர்கள் பிப்ரவரி 4ம் தேதி ஒரு மணி நேரம் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.