புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (12:15 IST)

விஷ்வ இந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை! – உத்தர பிரதேசத்தில் பதற்றம்!

உத்தர பிரதேசத்தில் இந்து மகாசபை மாநில தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநில விஷ்வ இந்து மகாசபை தலைவராக பதவி வகித்து வருபவர் ரஞ்சித் பச்சன். முன்னதாக சமாஜ்வாதி கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருந்த ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.

தற்போது விஷ்வ இந்து மகாசபையின் மாநில தலைவராக பதவி வகித்து வரும் ரஞ்சித் இன்று காலை தனது சகோதரருடன் நடைபயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த முகமூடி அணிந்த கும்பல் துப்பாக்கியால் ரஞ்சித்தை சரமாரியாக சுட்டதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பலியானார். சில காயங்களுடன் அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சித் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித்தை சுட்டவர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.