பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி: கருத்துக்கணிப்பு..!
பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் வைத்தால் கட்சிகளின் வாக்கு சதவீதம் என்ன என்பது குறித்த கருத்து கணிப்பில், இப்போது தேர்தல் நடந்தால் பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்த நிலையில், அதில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிகளின் ஆதரவால் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் முடிந்து இன்னும் ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், பாஜக கூட்டணியின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகவும், இப்போது தேர்தல் வைத்தால் முழு மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 293 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தேர்தல் வைக்கப்பட்டால் 343 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதே நேரத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva