செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

இணைகிறது இரண்டு கட்சிகள்: தலைவர்களை ஒன்றிணைக்க சூளுரை!

இணைகிறது இரண்டு கட்சிகள்: தலைவர்களை ஒன்றிணைக்க சூளுரை!
அரசியலில் ஒரு கட்சி இரண்டாகப் பிரிவதும் அதன் பின்னர் பிரிந்த கட்சிகள் மீண்டும் அக்கட்சியுடன் இணைவதும் வழக்கமாக நடைபெறும் நடைமுறையாக உள்ளது 
 
அந்த வகையில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் இருந்து பிரிந்த கட்சி இன்று முறைப்படி மீண்டும் இணைகிறது 
 
லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தனது கட்சியை இன்று சரத் யாதவும் முறைப்படி இணைக்கின்றார். அதுமட்டுமின்றி ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த அனைத்து கட்சி தலைவர்களையும் இதேபோல் ஒன்றிணைக்க உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வரை இருப்பதை அடுத்து பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே மூச்சாக பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதுதான் தங்கள் கொள்கை என்றும் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்