அஞ்சு ரூபாய்க்கு டிபன், பத்து ரூபாய்க்கு புல் மீல்ஸ். முதல்வரின் அதிரடி திட்டம்

tiffin and lunch" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (22:34 IST)
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'அம்மா உணவகம்' மக்களின் பேராதரவுடன் இயங்கி வரும் நிலையில் இந்த திட்டத்தை பின்பற்றி 5 ரூபாயில் காலை உணவும், 10 ரூபாயில் மதிய உணவும் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை ஹரியான முதல்வர் அறிவித்துள்ளார்.இன்று நடந்த தொழிலாளர்கள் துறை கூட்டத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மனோகர் லால் கட்டார், இந்த திட்டத்திற்கு அண்ட்யோதயா அன்ன யோஜனா என்ற பெயரை வைத்துள்ளதாகவும், இந்த திட்டம் இன்னும் மாதத்திற்குள் அமல் படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த திட்டத்தின்படி கட்டிட தொழில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் இருக்குமிடம் சென்று வழங்கவும் ஏற்பாடு  செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :