1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (13:19 IST)

கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் சுயேட்சையாக களமிறங்குவேன்: கே.எஸ்.ஈஸ்வரப்பா

பாஜகவில் இருந்து நேற்றைய கே.எஸ்.ஈஸ்வரப்பா நீக்கப்பட்ட நிலையில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் வெற்றிக்கு பிறகு மீண்டும் பாஜகவில் இணைவேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா என்பவர் ஷிவமொகா என்ற தொகுதியில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்த நிலையில் அவரை கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து ஆறு வருடத்திற்கு கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது 
 
இந்த நிலையில் நேற்று அவர் வேட்புமனுவை பெறுவதற்கான காலக்கெடு அளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வாபஸ் பெறவில்லை என்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஐந்து முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்ட நான் தற்போது சுயேட்சையாக தேர்தலை எதிர்கொள்ளப் போகிறேன் என்றும் இந்த தொகுதியில் கண்டிப்பாக நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் நான் வெற்றி பெற்றவுடன் என்னை கட்சியில் இருந்து நீக்கியவர்களே என்னை கட்சிக்கு அழைப்பார்கள் என்றும் அப்போது நான் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 
Edited by Siva