வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (12:45 IST)

மாமல்லபுரம் அருகே கார் விபத்து வழக்கு.. நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளான நிலையில் இது குறித்த வழக்கில் அவர் என்று நீதிமன்றத்தில் ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாஷிகா ஆனந்த் தனது தோழி மற்றும் ஆண் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று திரும்பிய போது மாமல்லபுரம் அருகே திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் நெருங்கிய தோழி பவானி ஷெட்டி என்பவர் சம்பவ இடத்திலேயே காலமான நிலையில் யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது இரு ஆண் நண்பர்களும் படுகாயம் அடைந்து அதன் பின் சிகிச்சை பெற்று மீண்டு வந்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று யாஷிகா ஆனந்த் நேரில் ஆஜரானதாகவும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran