திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 அக்டோபர் 2020 (10:58 IST)

தீபாவளிக்கு தயாராக உள்ள மூன்று படங்கள் –ரிஸ்க் எடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்!

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் எந்த தயாரிப்பாளரும் தங்கள் திரைப்படத்தை ரிலிஸ் செய்ய முன்வருவதில்லை என சொல்லப்படுகிறது.

கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு 6 மாத காலத்துக்கு மேல் ஆகும் நிலையில் இப்போது மத்திய அரசு 50 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகளை திறந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் வராது என்பதால் இப்போது வரை எந்த தயாரிப்பாளரும் தங்கள் படங்களை ரிலிஸ் செய்ய முன் வரவில்லை.

இந்நிலையில் எம்ஜிஆர் மகன், களத்தில் சந்திப்போம் மற்றும் இரண்டாம் குத்து ஆகிய படங்கள் மட்டும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.