ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (12:16 IST)

கடத்தியவரை விட்டு அம்மாவிடம் வர மறுத்த குழந்தை.. போலீசார் கைது செய்த போது நடந்தது என்ன?

இரண்டு வயது குழந்தையை மர்ம நபர் ஒருவர் கடத்திய நிலையில் அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்த போது அவரை விட்டு குழந்தை அம்மாவிடம் வர மறுத்த நெகிழ்ச்சியான சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 1 வயது குழந்தை பிரித்வி என்பவரை தனுஷ் என்பவர் கடத்தி உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக தனது உறவினரின் குழந்தை தனுஜை அவர் கடத்தி கடத்திய நிலையில் இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 14 மாதங்கள் கழித்து தனுஜை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து 14 மாதங்கள் தனுஜ் குழந்தையை வளர்ந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட பாசப்பிணைப்பு காரணமாக தாயுடன் அந்த குழந்தை வர மறுத்து அடம்பிடித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் குற்றவாளியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது குழந்தை பிரித்வி கதறி அழுததாகவும் ஆனாலும் வேறு வழி என்று போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran