டிஜிபி நியமனத்தில் UPSC விதிகளை ஃபாலோ பண்ண முடியாது! – முதல்வர் அதிரடி முடிவு!
மாநில காவல்துறை அமைப்பில் உயரிய பொறுப்பான டிஜிபி உள்ளிட்ட பதவிகளுக்கு யுபிஎஸ்சி நெறிமுறைகளை பின்பற்ற முடியாது என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்குமான காவல்துறை அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. எனினும் காவல்துறையின் உயர் பதவிகளான டிஜிபி உள்ளிட்ட பதவிகள் மத்திய அரசின் யுபிஎஸ்சி வழிகாட்டு முறைகளை பின்பற்றியே நிரப்பப்பட்டு வருகின்றன
இந்நிலையில் இனி பஞ்சாப்பில் டிஜிபி நியமனத்திற்கு மாநில அரசின் வழிகாட்டு முறைகளே பின்பற்றப்படும் என்றும், மத்திய அரசின் யுபிஎஸ்சி வழிமுறைகள் பயன்படுத்தப்படாது என்றும் அம்மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்துள்ளது.
இதற்கான சட்ட மசோதாவையும் பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.