திருமணமான மூன்றே நாளில் தூக்கில் தொங்கிய புதுமாப்பிள்ளை: அரியலூரில் சோகம்!
அரியலூரில் திருமணமான மூன்றே நாட்களில் புதுமாப்பிள்ளை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரை சேர்ந்த 26 வயது ராஜாராம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வசந்தி என்பவருக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது
திருமணத்திற்கு பின்னர் மணமகன் மணமகள் ஆகிய இருவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்
இந்த நிலையில் புதுமாப்பிள்ளை ராஜாராம் திடீரென சாமி கும்பிட போன இடத்தில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
இப்போது வரை அவர் எதற்காக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை என்று கூறப்படுகிறது
Edited by Mahendran