1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:00 IST)

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 20 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,682 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 20,510 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 152 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 24,191 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,005 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,21,945 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது