1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today kerala corona virus details

இன்று ஒரே நாளில் 214 பேர் கொரோனாவுக்கு பலி: கேரளாவில் அதிர்ச்சி

kerala
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 16 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,768 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 21,367 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 214 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
மேலும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 23,897 என்றும் இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,05,513 என்றும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 1,61,195 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
 
 
 
அடுத்த கட்டுரையில்
பள்ளி மாணவிகளுக்குக் கொரோனா