கொரோனா ஒருபுறம், கொட்டும் மழை மறுபுறம் - திணறும் கேரளம்!
கேரளா முழுவதும் 30 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
கேரளா முழுவதும் 30 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதனபடி கடந்த சில தினங்களாக திருவனந்தபுரம், கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கேரளா, லட்சத்தீவு கடல் பகுதியில் 30 ஆம் தேதி வரை மோசமான காலநிலை நிலவும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.