தொடர்புடைய செய்திகள்
- தங்கம் விலை இன்று சிறிய அளவில் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
- ’கூலி’ படத்திற்கு 2 வாரங்கள் தான் டைம்.. அதன் பின் வெளியாகும் 5 படங்கள்.. வசூலை எடுக்க முடியுமா?
- தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மீண்டும் ரூ.75000க்குள் விற்பனை..!
- இன்று ஒரே நாளில் 500 ரூபாய்க்கும் மேல் இறங்கிய தங்கம்.. இன்னும் இறங்குமா?
- கூலி டிக்கெட் முன்பதிவு.. 1 மணி நேரத்திற்கு 1 கோடி ரூபாய் வசூலா?
திருமண நகை என தெரிந்ததும், திருடிய நகையை திருப்பி கொடுத்த திருடன்.. கேரளாவில் ஆச்சரிய சம்பவம்..!
கேரளாவில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம், இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஒரு பெண்ணின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையை திருடிச் சென்ற திருடன், அது திருமண நகை என்று தெரிந்ததும், அதை மீண்டும் திருடிய இடத்திலேயே திருப்பி வைத்துவிட்டு சென்றுள்ளான். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கேரளாவின் கீதா என்பவர் தன்னுடைய திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள் திருடுபோனதாக காவல் துறையிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் தகவல் அளித்திருந்தார். இந்த தகவல் திருடிய நபரின் கவனத்திற்கு சென்றுள்ளது. ஒரு பெண்ணின் திருமணத்திற்காக வைத்திருந்த நகையை தான் திருடிவிட்டோம் என்றும், தன்னால் அந்தப் பெண்ணின் திருமணம் நின்று போகக்கூடாது என்றும் நினைத்த அந்தத் திருடன், கீதா தங்கியிருந்த இடத்திலேயே, திருடிய நகையை வைத்துவிட்டு சென்றான்.
நகையுடன், அதில் ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அந்தத் திருடன் வைத்திருந்தான். தன்னால் ஒரு திருமணம் நிற்கக் கூடாது என்று நினைத்து, திருடிய நகையை திருப்பி கொடுத்த அந்தத் திருடனின் செயலை அறிந்த நெட்டிசன்கள், "திருடனாக இருந்தாலும் நல்ல திருடனாக இருக்கிறானே" என்று சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
