தொடர்புடைய செய்திகள்
- மேயர் பிரியா வராங்க.. செய்தி வாசிப்பாளர் மாதிரி பேசிட்டு போறாங்க.. ஆனா தீர்வு கிடைக்கல.. நடிகை சனம் ஷெட்டி
- மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!
- சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!
- 100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?
- சென்னையில் ஏசி மின்சார பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள்: முழு விவரங்கள்..!
தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.640 சரிவு.. மீண்டும் ரூ.75000க்குள் விற்பனை..!
கடந்த சில நாட்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.75,000-ஐ தாண்டி விற்பனையானது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 குறைந்துள்ள நிலையில், ஒரு பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.9,295-க்கும், ஒரு பவுன் ரூ.74,360-க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ.10,140-க்கும், ஒரு பவுன் ரூ.81,120-க்கும் விற்பனையாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில், 22 காரட் தங்கம் ஒரு பவுனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.126,000.00க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.126-க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த விலை, இன்று குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Siva
