கேரளாவில் இன்று ஒரே நாளில் 42,464 பேருக்கு கொரோனா பாதிப்பு!

கேரளாவில் இன்று ஒரே நாளில்  42,464 பேருக்கு கொரோனா பாதிப்பு
siva| Last Updated: வியாழன், 6 மே 2021 (18:22 IST)
கேரளாவில் இன்று ஒரே நாளில் 42,464 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகம் மட்டுமின்றி தமிழகத்தின் அண்டை மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளத்தில் தமிழகத்தை விட இரண்டு மடங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது அம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி கேரளாவில் இன்று ஒரே நாளில் 42,464 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் என்று கொரோனாவில் இருந்து குணவர்களின் எண்ணிக்கை 27,152 என்றும் ஒரு நாள் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 63 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,90,906என்றும் கொரோனாவுக்கு பலியான நபர்களின் மொத்த எண்ணிக்கை என்றும் 5,628 கூறப்பட்டுள்ளது

மேலும் கொரோனாவால் குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை 13,89,515 என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கை அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததேஇதில் மேலும் படிக்கவும் :