நாம ஒன்னு முடிவு பண்ணால் கொரோனா ஒன்னு முடிவு பண்ணுது… மாநாடு டீம் புலம்பல்!
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்த இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
இன்னும் ஒரு முக்கியமான காட்சியாக் படத்தில் இடம்பெறும் மாநாடு காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இதற்காக மாநாடு செட் அமைக்கப் பட்டு அந்தக் காட்சிகளை இயக்குனர் வெங்கட் பிரபு படமாக்கிவிட்டாராம். திட்டமிட்டப்படி படப்பிடிப்பு முடிந்துள்ளதால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மகிழ்ச்சியில் உள்ளாராம். இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பை முடித்தால் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிடுமாம்.
இறுதிக் கட்ட படப்பிடிப்பு ஏர்போட்களில் படமாக்க வேண்டும் என்பதால் அதை மாலத்தீவுகளில் சென்று எடுக்கலாம் என படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலைக் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வது சிக்கல் ஆகியுள்ளதால், இப்போது ஓசூர் ஏர்போட்டில் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.