வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 27 மார்ச் 2020 (10:10 IST)

கொரோனா சும்மா இல்லங்க, இந்தியாவில் 17 உயிர் போச்சு....

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. 
 
சீனாவில் யூகான் பகுதியில் உருவெடுத்த கொரோனா வைரஸ் அங்கு 3,287 உயிர்களை பறித்து தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா தொற்று யாருக்கும் இல்லை, மேலும் அங்கு இயல்பு நிலையும் துவங்கியுள்ளது. 
 
ஆனால், தற்போது கொரோனா உலகம் முழுவதும் அதீத உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று 22,000 ஆக இருந்த நிலையில், தற்போது 24,000 ஆக அதிகரித்துள்ளது. அதாவது உலக அளவில் ஒரே நாளில் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
குறிப்பாக இந்தியாவை பொருத்த வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆகவும் உள்ளது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணமே உள்ளது.