வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (09:24 IST)

திருமண கோலத்தில் Exam போகலாம்.. சரக்கடிக்க போகலாமா? – வைரலாகும் தம்பதியர் சேட்டை!

Kerala
கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு மதுபானக்கடைக்கு தம்பதியர் சென்று மதுபானம் வாங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

முன்பெல்லாம் திருமணம் செய்து கொண்டால் திருமணமான தம்பதிகள் திருமண கோலத்தில் கோவிலுக்கு செல்வார்கள். ஆனால் சமீபமாக ட்ரெண்டிங்கிற்காக திருமண கோலத்தில் வித்தியாசமான சில இடங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. சமீபத்தில் திருமண கோலத்தில் பெண்கள் சிலர் தேர்வறையில் தேர்வு எழுதும் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதி மதுபானக்கடைக்கு சென்று ட்ரெண்டாகியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருமணமான புது தம்பதியர் திருமண உடையிலேயே அங்கிருந்த மதுபானக்கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வித்தியாசமான முறையில் அவர்கள் திருமணத்தை கொண்டாடியதை சிலர் ஆச்சர்யமாக பார்த்துள்ளனர். அதேசமயம் சமூக வலைதளங்களில் சிலர் ட்ரெண்டிங்கிற்காக இப்படி செய்வது சரியா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Edit by Prasanth.K