திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 அக்டோபர் 2023 (11:19 IST)

குப்பையில் போட்ட லாட்டரிக்கு ரூ.1 கோடி பரிசு.. ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!

Lottery
கேரளாவை சேர்ந்த  ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் லாட்டரி சீட்டு வாங்கிய நிலையில் அந்த லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுகாது என நினைத்து குப்பையில் போட்ட நிலையில் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுனில் குமார் என்பவர் சமீபத்தில் ஒரு கோடி ரூபாய் பரிசு தொகை உள்ள லாட்டரி சீட்டு வாங்கினார். இதனை அடுத்து அவர் தனது வீட்டில் உள்ள குப்பைத் தொட்டியில் லாட்டரி சீட்டை வீசிவிட்டார். லாட்டரி சீட்டில்நமக்கு பரிசு விழுகாது என்று நினைத்த நிலையில் அவர் குப்பை தொட்டியில் போட்ட நிலையில் திடீரென அவர் அந்த குப்பை தொட்டியை கிளறி லாட்டரி சீட்டை எடுத்து பரிசு விழுந்து உள்ளதா என பார்த்துள்ளார்.
 
 எதிர்பாராத வகையில் அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் அரசு விழுந்தது என்பதை கண்டு அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.  நல்ல வேலையாக குப்பைத்தொட்டியில் உள்ள குப்பையை வெளியே கொட்டாமல் இருந்ததால் அவருக்கு அந்த பரிசு தொகை கிடைத்தது. 
 
இந்த பணத்தை வைத்து தான் அடமானம் வைத்த வீட்டை மீட்க போவதாகவும் புதிய வீடு கட்ட போவதாகவும் அனைத்து கடன்களையும் அடைக்க போவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva