வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:34 IST)

ஓணம் பம்பர் லாட்டரி.. 4 பேர் சேர்ந்து வாங்கியவர்களுக்கு ரூ.25 கோடி பரிசு..!

Lottery
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி விற்பனை செய்யப்படும் நிலையில் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட ஓணம் பம்பர் லாட்டரியில் 4 பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு கிடைத்துள்ளது. 
 
தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட நான்கு பேர் இணைந்து  நான்கு லாட்டரி சீட்டுகள் வாங்கினர். இதில் ஒரு சீட்டுக்கு ரூபாய் 25 கோடி பரிசு விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதனை அடுத்து நான்கு பேரும் திருவனந்தபுரம் சென்று லாட்டரி அலுவலகத்தில் பரிசு லாட்டரி சீட்டை ஒப்படைத்தனர்.
 
பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு திருப்பூர் வழியில் தான் இந்த நான்கு பேரும் சேர்ந்து நான்கு டிக்கெட் வாங்கி உள்ளனர் என்பதும் இந்த டிக்கெட்டுக்கு தான் 25 கோடி பரிசு கிடைத்துள்ளது. நான்கு பேரும் அதை பகிர்ந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran