செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (19:08 IST)

அமெரிக்க லாட்டரி சீட்டு.. இந்தியருக்கு ரூ.14,000 கோடி பரிசு..!

Lottery
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த லாட்டரி குலுக்களில் ரூ.14,000 கோடி ரூபாய் பரிசு ஒரு இந்தியருக்கு விழுந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்கவில் பிரபலமான பவர் பால் லாட்டரியில் 173 கோடி டாலர் முதல் பரிசு என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 14000 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த பரிசு கலிபோனியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அமெரிக்க லாட்டரி வரலாற்றில் இரண்டாவது  மிகப்பெரிய பரிசு தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
பரிசுக்கான டிக்கெட் வைத்திருப்பவர் முழு தொகையை 30 ஆண்டுக்கு பிரித்து ஒவ்வொரு ஆண்டும் தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேவைப்பட்டால் வரிப்பிடித்தம்  போக மீத தொகையை மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரூ.14000 கோடி பரிசு விழுந்த அந்த இந்தியருக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை நினைத்து அமெரிக்கர்களே ஆச்சரியமடைந்து வருகின்றனர்.
 
Edited by Mahendran