வெயில் காரணமாக வேலை நேரத்தை மாற்றி அமைத்த கேரள அரசு! ஊழியர்கள் மகிழ்ச்சி
கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்ட காரணத்தால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், அலுவலகத்திற்கு பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்களின் நலனை கணக்கில் கொண்டு வேலை நேரத்தை கேரள தொழிலாளர் நலத்துறை மாற்றி உள்ளது.
இதன்படி காலை 7 மணி முதல் மாலை 7 மணிக்குள் பகல் வேலை நிறைவடையும்படி வேலை நேரத்தை மாற்றியுள்ள கேரள அரசு மாலை நேர வேலையாக இருந்தால் மூன்று மணிக்கு மேல் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை உணவு இடைவேளை கொடுக்க வேண்டும் என்றும் அம்மாநில தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நேர மாற்றம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் இந்த அறிவிப்பால் அம்மாநிலத் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழகத்திலும் இதேபோல் ஒரு அறிவிப்பு தேவை என்பது பெருவாரியான ஊழியர்களின் விருப்பமாக உள்ளது.தமிழக அரசு இதுகுறித்து சிந்திக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்