செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (09:20 IST)

கொரோனாவைக் கண்டுபிடிக்க walk-in- kiosk – இந்தியாவிலேயே முதல் முறையாகக் கேரளாவில் அறிமுகம் !

தென் கொரியாவில் கொரோனா நோயாளிகளைப் பாதுகாப்பாக பரிசோதிக்க அறிமுகப்படுத்தப்பட்ட முறையை கேரளாவிலும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

உலகெங்கும் கொரோனா மிகவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பதால் சோதனை செய்யபப்ட்டு வருகின்றனர். கொரோனா பரவும் தன்மை எளிதாக இருப்பதால் நோயாளிகளிடம் இருந்து மருத்துவப் பணியாளர்களுக்கு எளிதாக பரவும் அபாயம் இருக்கிறது.

இதையடுத்து மருத்துவர்களை பாதுகாக்கும் விதமாக தென் கொரியாவில்  walk-in- kiosk என்னும் பரிசோதனை முறையானது தற்போது கேரளாவிலும் பின் பற்றப்படுகிறது. அதன் படி கண்ணாடி சுவருக்குள் இருக்கும் மருத்துவர் அதில் இருக்கும் துளைகளின் வழியே கைவிட்டு நோயாளியின் ரத்தம் மற்றும் சளி ஆகியவற்றின் மாதிரிகளை எடுப்பார். அதன் பின்னர் மாதிரிகளை வைத்துக் கொண்டு கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறையின் மூலம் வெறும்  நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறையை அமைக்க 40,000 ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது.